மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எரிச்சலால் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என முதல்வர் பேச்சு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தென்காசியில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இயற்கைக்கும், வீரத்துக்கும், அன்மிகத்துக்கும், வேளாண்மைக்கும் புகழ்பெற்ற தென்காசிக்கு வந்ததில் பெருமை கொள்கிறேன். 19 மாதங்களில் பல்வேறு சாதனைகள். இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் 50,390 மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர். உங்கள் முதல்வர் திட்டத்தின் கீழ் 11,490 மனுக்கள் பெறப்பட்டு 11,400 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தென்காசி மக்களின் பிரதான கோரிக்கையான ஜம்பு நதி திட்டம் கடந்த ஆட்சியில் முறையாக அனுமதி வழங்கப்படாததால் திட்டம் தாமதமானது; தற்போது வனத்துறையிடமிருந்து அனுமதி பெறப்பட்டு விட்டது. முறையாக பணிகள் விரைவில் வழங்கும். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எரிச்சலால் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை; என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.