உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் – பன்னீர்செல்வம்

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் என்று தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் என்று தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு சொத்து உரிமையில் சம பங்கு வழங்குவது தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு  வந்த நிலையில், 2005 இந்து சொத்தூரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், ஆண்பிள்ளைகளுக்கு வழங்குவது போல பெண்பிள்ளைகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் இது குறித்து தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், உச்ச நீதிமன்றம் “பூர்வீக சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு” என்று வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன். இத்தீர்ப்பால், சமூகநீதி நிலைநாட்டப்பட்டதுடன், பெண்கள் முன்னேற்றத்திற்கு இது மேலும் வலுசேர்ப்பதாக அமையும் என்று பதிவிட்டுள்ளார்.

unknown node