நான் இவருக்கு தான் வாக்களித்தேன்... வெளிப்படையாக கூறிய காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன்.!

நான் மதசார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர் இளங்கோவனுக்கு வாக்களித்தேன். -காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

நான் மதசார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர் இளங்கோவனுக்கு வாக்களித்தேன். -காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காலை7 மணிக்கே தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தலில் மக்கள் நீண்ட வரிசையில் கூட காத்திருந்து நின்று வாக்களித்து வருகின்றனர்.

ஏற்கனவே, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேமுதிக கட்சி வேட்பாளர் ஆனந்த் ஆகியோர் வாக்களித்த நிலையில் தற்போது திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது வாக்கினை செலுத்தினர்.

யாருக்கு வாக்களித்தேன் :கச்சேரி வீதி, மாநகராட்சி தொடக்க பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை அவர் செலுத்தினார். அதன் பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் மதசார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர் இளங்கோவனுக்கு வாக்களித்ததாக குறிப்பிட்டார். அவருக்கே அவர் வாக்களித்ததாக வெளிப்படையாக கூறினார்.

அடையாள வெற்றி :மேலும் கூறுகையில், 80 சதவீத மக்கள் கை சின்னத்தில் வாக்களிப்பிளர் என நம்பிகை இருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக்கு அடையாளமாக இந்த தேர்தல் அமையும் எனவும், ராகுல்காந்தியின் தியாக நடைப்பயணத்திற்கு இது பரிசாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.

2024 நாடாளுமன்றம் :மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அமையும். எனவும் குறிப்பிட்டார். அப்போது செய்தியாளர்கள், வாக்காளர்களுக்கு வைக்கப்படும் மை அழிவதாக கூறப்படுவது பற்றி கேட்டனர்.

மை அழிகிறது :அதற்கு பதில் அளித்த இளங்கோவன், கமரராஜர் குறிப்பிட்டது போல, மையாவது, மண்ணகங்கட்டியாவது மக்கள் வாக்களித்தார்கள் அவர்கள் ஜெயித்தார்கள் என அப்போதே கூறிவிட்டார். இதெல்லாம் தவறாக பரப்பப்படும் செய்தி. நான் வாக்களித்தேன் எனக்கு வைத்த மை அப்படியே தான் இருக்கிறது. என திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் குறிப்பிட்டார்.

நான் இவருக்கு தான் வாக்களித்தேன்... வெளிப்படையாக கூறிய காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன்.!