முதல்வருக்கு உடல்நலக்குறைவு – சீமான் ட்வீட்

முதல்வர் முழு உடல்நலம் பெற்று மீண்டு வந்து, பணிகளைத் தொடர எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என சீமான் ட்வீட்.

முதல்வர் முழு உடல்நலம் பெற்று மீண்டு வந்து, பணிகளைத் தொடர எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என சீமான் ட்வீட்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி,நாளை  மற்றும் நாளை மறுநாள் முதல்வர்  கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும், இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட செய்தியறிந்தேன். அவர் முழு உடல்நலம் பெற்று மீண்டு வந்து, பணிகளைத் தொடர எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node