டெல்லியில் பாஜக நிர்வாகி சுரேந்தர் குமார் என்பவர் கட்சி அலுவலகத்தில் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் பாஜக நிர்வாகி ஒருவர் பாஜக அலுவலகத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுரேந்தர் குமார் எனும் 60 வயது நபர் பாரதிய ஜனதா கட்சியில் விவசாய அமைப்பின் முக்கிய பநிர்வாகியாக பதவியில் இருந்துள்ளார். இவர் நேற்று துவாரகா பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் வந்து இவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
சிக்காத கொலையாளி :
unknown nodeஇந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் சுரேந்தர் குமார் அவரது அலுவலகத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பிண்டாபூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையாளி யார் என்பது பற்றி இன்னும் தெளிவான தகவல் தெரியவில்லை. மேலும், இந்த கொலைக்கான நோக்கம் பற்றியும் இன்னும் தகவல் வெளியாகவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
தனிப்படை – சிசிடிவி :
unknown nodeகுற்றவாளிகளை தேடி பிடிக்க தற்போது தனிப்படைகள் அமைத்து உள்ளதாகவும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருவதாகவும் துவாராக பகுதி காவல்துறை துணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகி அவரது அலுவலகத்திலேயே சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.