திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது.!

Interviews have begun with those who have applied to contest on behalf of the DMK.

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியுள்ளது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு உள்ளிட்டோர் நேர்காணாலை நடத்துகின்றனர்.

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 400 நபர்களுக்கு இன்று காலை அழைப்பு விடுத்துள்ளது. காலையில் 5 மாவட்டங்களில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.

இந்த நேர்காணல் முடிந்த பிறகு இன்று மாலை விருதுநகர், சிவகங்கை, தேனீ உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெற இருக்கிறது. ஒரு தொகுதிக்கு 30 பேர் வீதம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று தொடங்கும் நேர்காணல் வரும் சனிக்கிழமை வரை நடைஏப்ர உள்ளது.