மேகாலயா சட்டமன்ற தொகுதியில் தற்போது வரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்றே தகவல் வெளியாகி வருகிறது.
மேகாலயா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் , முன்னிலை நிலவரம் வெளியாகி கொண்டிருக்கிறது. ஒரு தொகுதியில் மட்டும் வேட்பாளர் உயிரிழந்த காரணத்தால் அங்கு தேர்தல் நிறுத்தப்பட்டு, மீதம் உள்ள 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
தற்போது இந்த தொகுதிகளின் முன்னணி நிலவரம் வெளியாகி உள்ளது. கடந்த முறை தேசிய மக்கள் கட்சி 18 இடங்களில் மட்டுமே வென்று இருந்தது. காங்கிரஸ் 21 இடங்களை வென்று இருந்தது. இருந்தும் தேசிய மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது.
இந்த தேர்தலில் தேசிய மக்கள் கட்சி, பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் என எல்லாம் தனி தனியே போட்டியிட்டனர். இதில் தற்போது வரையில், தேசிய மக்கள் கட்சி NPP 23 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், திரிணாமுல் 6 இடங்களுக்கும், பிற கட்சிகள் 24 இடங்களிலும் முன்னிலை வகித்து வருவதால், யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் நிலவி வருகிறது.