ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் – அதிமுக அறிவிப்பு

Jayalalithaa Birthday Celebrations Public Meetings - AIADMK Announcement

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறும் தேதியை அதிமுகஅறிவித்துள்ளது.

அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும் ,முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 73-வது  பிறந்தநாள் வருகின்ற 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அதிமுக சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 24 ,28 மற்றும் மார்ச் மாதம் 1 மற்றும் 2 ஆகிய 4 நாட்களில் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும் ,புதுச்சேரி ,கர்நாடகா ஆகிய பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

unknown node