"என் சொந்த பணிகள் காரணம் கருதி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன்" – கமீலா நாசர்

Kameela Nasser reports that I am leaving the People's Justice Center party, considering the reason for my own missions.

என் சொந்த பணிகள் காரணம் கருதி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன் என கமீலா நாசர் அறிக்கை.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சென்னை மண்டலத்தில் மாநிலச் செயலாளராக பதவி வகித்து வந்த நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் கட்சியில் இருந்து விலகுவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்திருந்தது. இன்று முதல் அனைத்து விதமான பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்திருந்தன.

இதுகுறித்து கமீலா நாசர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் சொந்த பணிகள் காரணம் கருதி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன். அரசியல் கற்று தந்த ஆசான், தலைவர் கமல்ஹாசன் மற்றும் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றிகள் என கூறியுள்ளார். இந்த பயணத்தில் கிடைத்த அனுபவத்தை என் வாழ்நாள் பொக்கிஷமாக கருதி விடைபெறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

unknown node