இரவில் கூடும் கர்நாடக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ க்கள் கூட்டம் – நாளைய தினத்திற்கு ஏற்பாடா!

பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று இரவு கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாளை சட்டமன்ற பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு

பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று இரவு கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாளை சட்டமன்ற பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் கூட்டம் நடைபெறுகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து ஆட்சியில் இருக்கிறது. இந்த நிலையில், இந்த அரசுகள் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி 16 உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. மேலும், பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தொடர்ந்து கூறி வந்தது. அனால், சபாநாயகர் நடத்தவில்லை.

இந்த சூழலில் நாளைய தினம் சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்ற தகவல் வெளியுள்ளது. எனவே, தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது சொகுசு விடுதி ஒன்றில் நடந்து வருகிறது.