மணிப்பூர் கலவரத்தில் குக்கி சமூகத்தினர் 114 பேர் உயிரிழப்பு.! எம்எல்ஏக்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்.!

மணிப்பூர் கலவரத்தில் குக்கி சமூகத்தினர் 114 பேர் உயிரிழந்ததாக குக்கி இன எம்எல்ஏக்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

Manipur riots

மணிப்பூர் கலவரத்தில் குக்கி சமூகத்தினர் 114 பேர் உயிரிழந்ததாக குக்கி இன எம்எல்ஏக்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 எம்எல்ஏக்களில் 10 குக்கி இனத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் கூட்டாக பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு உள்ளனர். அதில், மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்த குக்கி இன மக்கள், பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றியும் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளனர்.

எம்எல்ஏக்கள் கூறிய தகவல்களில், மே 4ஆம் தேதி இம்பாலில் இரண்டு பெண்கள் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் , லாங்கோல் , நகாரியன் பகுதியில் நர்சிங் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டதாகவும் இம்பாலில் தாய் – மகன் எரித்து கொலை செய்யப்பட்டதாகவும் , இம்பால் மைய பகுதியில் மனம் நலம் குன்றிய குக்கி இன பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் பல்வேறு அதிர்ச்சி தகவலை குறிப்பிட்டனர்.

மேலும் , மே 4 மணிப்பூரில் கலவரம் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 114 குக்கி இனத்தவர்கள் உயிரிழந்ததாகவும் கூடுதல் அதிர்ச்சி தகவலை குக்கி இன 10 எம்எல்ஏக்கள் குறிப்பிட்டனர். இதனை அடுத்து, மணிப்பூரில் அமைதியை, சமுக நீதியை நிலைநாட்ட கருத்து வேறுபாடுகளை தவிர்த்து ஒட்டுமொத்த நாடும் எங்களுக்கு கைகொடுக்க வேண்டும் எனவும் அதிக கேட்டுக்கொள்ளப்பட்டது.