என் பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் – சசிகலா!

Sasikala has asked her supporters not to celebrate her upcoming birthday on August 18th.

ஆகஸ்ட் 18 ஆம் தேதி வர உள்ள தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என சசிகலா தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக அதிமுகவை சேர்ந்த சில தொண்டர்களிடம் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்பொழுதும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ரூபம் வேலவன் என்பவருடன் சசிகலா பேசக்கூடிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி, அதவாது நாளை சசிகலாவுக்கு பிறந்த நாள். எனவே, கொரோனா காரணமாக தன்னை யாரும் தனது பிறந்த நாளன்று சந்திக்க வரவேண்டாம் என கூறியுள்ள அவர், தனது ஆதரவாளர்கள் தாங்கள் வாசிக்க கூடிய பகுதியிலேயே மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யுமாறும் கூறியுள்ளார்.