கைத்தறி ஆடையை உடுத்துவோம்! பெருமையை உலகிற்கு உணர்த்துவோம் – முதல்வர் மு.க ஸ்டாலின்

Video released by Chief Minister MK Stalin on the occasion of National Handloom Day.

நெசவுத்தொழில் மென்மேலும் சிறக்க தேசிய கைத்தறி நாள் நல்வாழ்த்துக்கள் என்று  தெரிவித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ.

தேசிய கைத்தறி நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், பிரதிபலிக்கும் நெசவுத்தொழில் மென்மேலும் சிறக்க நெசவாளர் நலன் காக்கும் இவ்வரசின் நெஞ்சம் நிறைந்த அனைவருக்கும் தேசிய கைத்தறி நாள் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், உழைக்கும் மக்களின் உன்னத அடையாளம் இராட்டை என்றார் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள். அந்த மக்களின் உழைப்பில் உருவாகும் கைத்தறி ஆடைகள் நம் நாட்டின் பண்பாட்டின் அடையாளமாகும். கைத்தறி ஆடையை உடுத்துவோம்! அதன் பெருமையை உலகிற்கு உணர்த்துவோம் என்றும் முதல்வர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.

unknown node
கைத்தறி ஆடையை உடுத்துவோம்! பெருமையை உலகிற்கு உணர்த்துவோம் – முதல்வர் மு.க ஸ்டாலின்