எவ்வித உத்தரவாதமும் இன்றி ரூ.20 லட்சம் வரை சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்படும்-முதலமைச்சர் பழனிசாமி

சேலத்தில் வங்கிக்கடன் வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  பாண்டியன், பல்லவன் கிராம வங்கி இணைந்து தமிழக கிராம வங்கியாக

சேலத்தில் வங்கிக்கடன் வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  பாண்டியன், பல்லவன் கிராம வங்கி இணைந்து தமிழக கிராம வங்கியாக செயல்படுகிறது. விவசாயிகள், சுயஉதவி குழுக்கள், ஏழைகளுக்கு மட்டுமே கடனுதவி.கடன் வாங்கியவர்களில் 99% பேர் திருப்பி அளித்து சாதனை படைத்துள்ளனர் .

எவ்வித உத்தரவாதமும் இன்றி ரூ.20 லட்சம் வரை சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்படும்.  கந்து வட்டி கொடுமையில் இருந்து ஏழை, எளிய மக்களை தமிழக கிராம வங்கி விடுவிக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.