மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ்.ராம்பாபு காலமானார்!

Madurai: Former MP AGS Rambabu passed away at Corona.

மதுரை:முன்னாள் எம்.பி மற்றும் தமாகா பொதுச்செயலாளரான ஏ.ஜி.எஸ்.ராம்பாபு கொரோனாவால் நேற்று காலமானார்.

மதுரை முன்னாள் எம்.பியும்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் (தமாகா) பொதுச்செயலாளருமான ஏ.ஜி.எஸ்.ராம்பாபுஅவர்கள் கொரோனாவால்காலமானார்.உடல்நலக்குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது,இந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

மதுரை தொகுதியில் இவர் 1989,1991 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பாகவும்,1996 ஆம் ஆண்டு தமாகா சார்பாகவும் என 3 முறை மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.