பொன்.ராதாகிருஷ்ணை வெற்றி பெற செய்யுங்கள் – வீடு வீடாக சென்று அமித்ஷா வாக்கு சேகரிப்பு

Union Home Minister Amit Shah went door-to-door to collect votes after performing Sami darshan at Suchindram temple.

சுசீந்திரம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள், ஒரு கன்னியாகுமரி மக்களவை சீட்டு உள்ளிட்டவை வழங்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக கன்னியாகுமரி வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுசீந்திரம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, வீடு வீடாக சென்று பொன்.ராதாகிருஷ்ணனை வெற்றி பெற செய்யுமாறு வாக்கு சேகரித்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணனை வெற்றி பெற செய்யுங்கள் என்றும் அதிமுக – பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்பின் வெற்றிக் கொடி ஏந்தி செல்வோம் என்ற பரப்புரையை தொடங்கி வைத்து வீடு வீடாக சென்று பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற செய்யுங்கள் என வாக்கு சேகரித்து வருகிறார். தற்போது கொடி பேரணியில் அமித்ஷா பங்கேற்றுள்ளார் செட்டிகுளத்திலிருந்து வேப்பமூடு வரை திறந்த வாகனத்தில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.