#Breaking:புதுச்சேரி சபாநாயகர் தேர்தல் -பாஜக சார்பில் எம்.எல்.ஏ.செல்வம் போட்டி...!

Manaveli constituency MLA Selvam is contesting for the Puducherry Assembly Speaker's election on behalf of the BJP

புதுச்சேரியில் சபாநாயகரை தேர்வு செய்ய 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம், வரும் 16-ம் தேதி கூடுகிறது.

புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் தேர்தலில் போட்டியிட,பாஜக சார்பில் மணவெளி தொகுதி எம்.எல்.ஏ.செல்வம் இன்று வேட்புமனு தாக்கல்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணியின் முதல்வராக கடந்த 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார்.

பின்னர்,என்ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்தது.இதனையடுத்து, பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ரங்கசாமி ஒப்புக்கொண்டார்.

அதன்படி,புதுச்சேரியில் சபாநாயகரை தேர்வு செய்ய 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம், வரும் 16-ம் தேதி கூடுகிறது.இக்கூட்டமானது காலை 9:30 மணிக்கு நடைபெறவுள்ளது என பேரவை செயலாளர் முனிசாமி அவர்கள் தெரிவித்தார்.

இதற்கிடையில்,புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.அக்கூட்டத்தில்,புதுச்சேரி சபாநாயகர் தேர்தலில் பாஜக சார்பில் எம்.எல்.ஏ.செல்வத்தை நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில்,எம்.எல்.ஏ.செல்வம்,புதுச்சேரி சபாநாயகர் பதவிக்கு இன்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.