CBI கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், 2 நாள் விசாரணைக்கு பின்னர் நேற்று அமலாக்கத்துறையினரும் மணீஷ் சிசோடியவை நேற்று கைது செய்தனர்.
டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தியது தொடர்பாக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது எனவும், இதன் மூலமாக மதுபான ஆலைகள் சட்டவிரோத பணபரிவர்தனையில் ஈடுபட்டுள்ளது எனவும் டெல்லி துணை முதலவர் மணீஷ் சிசோடியா கைது கைது செய்யப்பட்டார்.
சிபிஐ – அமலாக்கத்துறை :
அரசுக்கு இழப்பீடு என வழக்குப்பதிவு செய்து சிபிஐ தரப்பும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை என அமலாக்கத்துறையினரும் தனித்தனியே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசோடியா கைது :
இதில், சிபிஐ கடந்த மாதமே 26ஆம் தேதியே, மணீஷ் சிசோடியவை கைது செய்து திகார் சிறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த செய்வ்வாய் கிழமை அன்று அமலாக்கத்துறையினர் சிசோடியாவிடம் விசாரணை நடத்தினர்.
சிசோடியா மீண்டும் கைது :
2 நாள் விசாரணைக்கு பின்னர் நேற்று அமலாக்கத்துறையினரும் மணீஷ் சிசோடியவை கைது செய்தனர். இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அமலாக்கத்துறையினர் சார்பில் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்ய உள்ளனர்.