கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செல்லூர் பூரண குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது அரசு.இதனிடையேகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டார்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று குணமடைந்துவிட்டதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே அமைச்சர்கள் தங்கமணி,நிலோபர் கபில் ஆகியோர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமைச்சர் அன்பழகன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
unknown node