யப்பா சாமி உங்க கேள்வியே வேண்டாம்.! அமைச்சர் துரைமுருகன் கலகல பதில்.!

பெங்களூரு எதிர்க்கட்சி கூட்டம் குறித்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பதில் கூறாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

Minister Duraimurugan

பெங்களூரு எதிர்க்கட்சி கூட்டம் குறித்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பதில் கூறாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் நேற்று புதிய பள்ளிக்கட்டிடங்களை திறந்து வைக்க காட்பாடி தொகுதி எம்எல்ஏவும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

முதலில், ஆளுனரை நீக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு கோரிக்கை வைதுள்ளாரே , முதல்வர் கோரிக்கையை ஏற்று ஆளுநர் மாற்றப்படுவாரா என்ற கேள்விக்கு, முதல்வரின் கோரிக்கையை குடியரசு தலைவர் ஏற்க வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசுடனான விவகாரத்தில் ஆட்சியே போனாலும் பரவாயில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது பற்றி கேட்கையில், அதனை முதல்வரிடம் தான் கேட்க வேண்டும் என குறிப்பிட்டார் மேலும்,பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சி கூட்ட்டம் பற்றி கேட்கையில், யப்பா சாமி ஆளை விடுங்க என தனக்கே உரித்தான பாணியில் நக்கலாக பதில் கூறி சென்றார் அமைச்சர் துரைமுருகன்.