அமைச்சர் காமராஜுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை – மருத்துவமனை

Minister for Food of the Government of Tamil Nadu. Kamaraj's health is stable, hospital management said today.

அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

கடந்த 5-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. பின்பு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் ,ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து எம்ஜிஎம். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என்று தெரிவித்துள்ளது.நுரையீரல் பாதிப்பு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் தகவல தெரிவிக்கப்பட்டுள்ளது .எக்மோ கருவி பொருத்த தேவையில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.