ரஷ்யா எரிபொருள் இறக்குமதி விவகாரம்.! வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்ஷங்கர் விளக்கம்.!

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதில் இந்தியாவை விட ஐரோப்பியா அதிகம் என அமைச்சர் ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதில் இந்தியாவை விட ஐரோப்பியா அதிகம் என அமைச்சர் ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.

ரஷ்யா,  உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க ஆரம்பித்தது முதல் உலக நாடுகள் பெரும்பாலானவை ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டுள்ளது. இருந்தும் அந்நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பில் தான் இருக்கிறது.

இதில், இந்தியா அதிக அளவில் ரஷ்யாவிடம் இருந்து புதைபடிவ எரிபொருளை இறக்குமதி செய்வதாக குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக டெல்லியில் பேசிய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் கூறுகையில், இந்தியாவை விட ஐரோப்பிய நாடுகள் அதிக அளவில் எரிபொருளை இறக்குமதி செய்கின்றன என குறிப்பிட்டார்.

போர் தொடங்கிய அதாவது, பிப்ரவரி 2022 முதல் நவம்பர் 2022 கால கட்டம் வரையில், இந்தியா இறக்குமதி செய்த எரிபொருளை விட ஐரோப்பிய நாடுகள் 6 மடங்கு அதிகமாக ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளதாக அமைச்சர் ஜெய் ஷங்கர் குறிப்பிட்டார்.