புதிய வகை ஓமைக்ரான் தொற்று பற்றி பதட்டப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று சென்னையில் மருத்துவ முகாமை துவங்கி வைத்து பின்னர் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது காப்பீட்டு திட்டங்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, கொரோனா பாதிப்புகள் பற்றி பேசினார்.
அவர் கூறுகையில், தமிழக்தில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். இந்தியாவிலேயே அரசு மருத்துவ காப்பீட்டின் மூலம் அதிகமானோர் பயன்பெற்றது தமிழகத்தில் தான். 1500 சிகிச்சைகள் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது என அமைச்சர் குறிப்பிட்டார்.
ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி, ஏராளமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வரையில் சுமார் ரூ.22 லட்ச ரூபாய் வரையில் பயன்பெற்று வருகிறார்கள். 1800 மருத்துவமனைகளில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்ற. தற்போது தமிழகத்தில் அதிக அளவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டார். கடந்த ஆண்டு 14 லட்சதிற்கும் அதிகமானோர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் பயன்பெற்றுள்ளனர்.
கொரோனா பாதிப்பு பற்றி பேசுகையில் , கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுக்க 6000க்கம் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 300க்கும் கீழேதான் பாதிப்பு உள்ளது. 12, 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து கொண்டு தான் வருகிரது. புதிய வகை ஒமைக்கிரான் வைரஸ் குறித்து பதட்டப்பட வேண்டிய சூழல் இல்லை. மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகள் சாப்பிட்டு 5,6 நாள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.