கலைஞரைப் போல உலக தமிழர் இதயங்களில் மு.க.ஸ்டாலின் இடம்பிடிப்பார்! – திருநாவுக்கரசர்

Congress MP Thirunavukarasar has said that MK Stalin will be in the hearts of world Tamils like an artist.

கலைஞரைப் போல உலக தமிழர் இதயங்களில் மு.க.ஸ்டாலின் இடம்பிடிப்பார் என்று  காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், பின்தங்கியுள்ள தமிழகத்தை முன்னெடுத்து சென்று தமிழ் மக்களுக்கு அனைத்து நன்மைகளையும் செய்வார் என்றும் சிறந்த முதல்வராக செயல்படுவார் எனவும் கூறியுள்ளார். முதல்வராக பதவியேற்கவுள்ள முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கலைஞரை போல் உலக தமிழர் இதயங்களில் முக ஸ்டாலினும் இடம்பிடிப்பார் என்றும் மாநிலங்களில் ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது, மத்தியில் ஒரு கட்சி ஆட்சியில் இருப்பது என்பது கடந்த காலங்களில் இந்திய நாட்டின் ஜனநாயகத்தோடு சிறப்பம்சம் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வரும் 7ம் தேதி முதல்வர் பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலின், நேற்று நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, இன்று 133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்துடன், முக ஸ்டாலின் ஆளுநர் மாளிகை சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.