#BREAKING: நாளை மறுநாள் காலை 9 மணிக்கு மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கிறார்...!

DMK leader MK Stalin will take over as chief minister tomorrow at 9 am.

நாளை மறுநாள் காலை ஒன்பது மணிக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்கயுள்ளார்.

இன்று காலை 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் பன்வாரிலால்  புரோகித்தை மு.க ஸ்டாலின் சந்தித்து முதல்வர் பதவிக்கான உரிமையை கோரினார். இதைத்தொடர்ந்து, சற்று நேரத்திற்கு முன் தமிழகத்தில் மு.க ஸ்டாலின் ஆட்சி அமைக்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்தார்.

ஆளுநர் அழைப்பு விடுத்தது குறித்து அவரது செயலாளர் ஆனந்தராவ் படேல் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் ஸ்டாலினை சந்தித்து ஆளுநரின் செயலாளர் ஆனந்தராவ் படேல் தெரிவித்தார்.

இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கயுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளனர்.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். எளிய முறையில் நடக்கும் பதவியேற்பு விழாவில் முக ஸ்டாலின் உடன் அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.

unknown node