கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தொடர் முன்னிலை!!

DMK leader MK Stalin, who is contesting from Kolathur constituency in the Tamil Nadu Assembly elections, continues to lead.

தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதல் சுற்றில் வெளியாகியுள்ள தகவலின்படி, திமுக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. அதுபோல், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் 16,136 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

முக ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ஆதிராஜாராம் 6,471 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இதனிடையே, அத்தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலுக்கு கொரோனா தொற்று காரணமாக புதிய தேர்தல் நடத்தும் அலுவலராக கண்ணன் என்பவரை நியமனம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.