மு.க.ஸ்டாலின் ட்விட்டரின் முகப்பு பக்கம் தமிழக முதலமைச்சர் என மாற்றம்.!

MK Stalin's Twitter homepage changed to Tamil Nadu Chief Minister.

மு.க.ஸ்டாலின் ட்விட்டரின் முகப்பு பக்கம் தமிழக முதலமைச்சர் என மாற்றப்பட்டது.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. திமுக மட்டுமே 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

இதைத்தொடர்ந்து, இன்று காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் முன்னிலையில் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். பின்னர், மீதமுள்ள 33 அமைச்சர்கள் தொடர்ந்து பதவியேற்று வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றத்தை தொடர்ந்து அவரின் ட்விட்டரின் முகப்பு பக்கம் தமிழக முதலமைச்சர் என மாற்றப்பட்டது.