அதிமுக-வை முடக்க எந்த கொம்பனாலும் முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

Minister Jayakumar has said that no one can symbolize the AIADMK and that the release of Sasikala will not have any impact on the AIADMK.

அதிமுகவின் சின்னத்தை யாராலும் முடியாது என்றும், சசிகலாவின் விடுதலை அதிமுக-வில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னை மந்தைவெளியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சிகள் நடக்கிறதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், அதிமுகவை எந்த கொம்பனாலும் முடக்க முடியாது. அதிமுகவின் சின்னத்தை யாராலும் முடியாது என்றும், சசிகலாவின் விடுதலை அதிமுக-வில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.