4.5 வருட பாஜக ஆட்சியில் உத்தர பிரதேசத்தில் எந்த கலவரமும் நடக்கவில்லை – முதல்வர் யோகி!

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has said that no riots have taken place in the state during the 4.5 years of BJP rule.

4.5 வருட பாஜக ஆட்சியில் உத்தர பிரதேச மாநிலத்தில் எந்த கலவரமும் நடக்கவில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று உத்திரப்பிரதேச மாநிலத்தில் 4.5 ஆண்டு கால பாஜக ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்பொழுது பேசிய முதல்வர் யோகி, எளிமையாக வர்த்தகம் செய்வதில் தேசிய அளவிலான தரவரிசையில் உத்தர பிரதேசம் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடந்த 4.5 ஆண்டு பாஜக ஆட்சியில் கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 1,800 கோடிக்கும் அதிகமான அரசு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சாதி, மத பேதமின்றி குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.