அங்கீகாரம் பெற்ற கட்சி சின்னம் கிடைத்த பின்புதான் தேர்தலில் அமமுக போட்டியிடும்-தினகரன்

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில்  வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன்  கூறுகையில் ,  வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் ,  அங்கீகாரம் பெற்ற கட்சி சின்னம் கிடைத்த பின்புதான் தேர்தலில் அமமுக போட்டியிடும் .தற்போது கட்சி பதிவு செய்யும் முயற்சியில் இருப்பதால்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அங்கீகாரம் பெற்ற கட்சி சின்னம் கிடைத்த பின்புதான் தேர்தலில் அமமுக போட்டியிடும்-தினகரன்