பிரதமருக்கு நினைவு பரிசு வழங்கிய ஓபிஎஸ் – இபிஎஸ்

Prime Minister Modi paid floral tributes to MGR and Jayalalithaa portraits at a function in Coimbatore.

கோவையில் நடைபெறும் விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த பிரதமர் மோடி, கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில், மேடையில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நினைவு பரிசு வழங்கினர். இவ்விழாவில் பிரதமர் மோடி பல்வேறு அரசு நலத் திட்டங்களை தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்பணிக்கிறார்.