ஓபிஎஸ் பிரதிநிதி கோவை செல்வராஜ் எந்த கட்சி என தெரியாது என ஜெயக்குமார் பேட்டி.
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில், ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் முதல் ஆளாக கூட்டத்தில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து, பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில், நானும், பொள்ளாச்சி ஜெயராமனும் கலந்து கொண்டோம். கோவை செல்வராஜ் எந்த கட்சியை சேர்ந்தவர் என தேர்தல் ஆணையத்திடம்தான் கேட்க வேண்டும். அதிமுகனா நாங்கதான், அதெல்லாம் சீரியசா எடுத்துக் கொள்ளாதீர்கள்.’ என தெரிவித்துள்ளார்.