#Breaking:சற்று முன்...ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஈபிஎஸ்-உடன் திடீர் சந்திப்பு!

அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை நீடிக்கும் சூழ்நிலையில்,ஆதரவு நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்

அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை நீடிக்கும் சூழ்நிலையில்,ஆதரவு நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 8வது நாளாக தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஓபிஎஸ் உடன்,அவரது இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் திட்டமிட்டபடி பொதுக்குழுவை கூடுவது குறித்து தம்பிதுரை,ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோருடன் ஈபிஎஸ் சென்னை பசுமை வழிசலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில்,ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு எடுத்திருந்த மாவட்ட செயலாளர்கள் ஈபிஎஸ் அவர்களை சந்தித்துள்ளனர்.குறிப்பாக,நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா,விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தற்போது ஈபிஎஸ் அவர்களை சந்தித்துள்ளனர்.இந்த சந்திப்பிற்கான காரணம் பின்னர் தெரிய வரும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.