தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,இன்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.அதன்படி,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள், நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய மாணவர் சேர்க்கை: மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கப்படுகிறது.பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,11-ம் வகுப்புகளுக்கு ஜூன் 27 ஆம் தேதியும்,12-ம் வகுப்புகளுக்கு […]
குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள பாஜக குழு ஒன்றை அமைத்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள பாஜக குழு ஒன்றை அமைத்துள்ளது. அதன்படி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக […]
கனிமொழி எம்.பி அவர்கள் அவர் சோனியாகாந்தி அவர்கள் விரைவில் நலம்பெற வாழ்த்துவதாக ட்வீட் செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் வெட்டு தனிமைப்படுத்துதலில் இருந்தார். இந்த நிலையில், தற்போது டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியாகாந்தி உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள் அவர் சோனியாகாந்தி அவர்கள் விரைவில் […]
நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்து தெரிவித்த கே.பால கிருஷ்ணன். கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளி தொடங்க உள்ள நிலையில், நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட கடந்த 2 கல்வி ஆண்டுகளைத் தொடர்ந்து, தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கவிருக்கிறது. கோடை விடுமுறை முடிந்து, நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு […]
ஆபாசமாக நடந்த புகாரில் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜகவில்அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் நீக்கம். அருப்புக்கோட்டை அருகே மாணவர்களிடம் ஆபாசமாக நடந்த தனியார் செவிலியர் கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேசை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஜான் பாஜக சிறுபான்மை பிரிவின் முன்னாள் மாவட்ட தலைவராக இருந்துள்ளார். ஆபாசமாக நடந்த புகாரில் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜகவில்அனைத்து விதமான […]
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு பல்வேறு துறை அதிகாரிகளை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். வணிகவரித் துறை முதன்மை செயலாளராக […]
பெண்களை இல்லத்தில் அடக்கி வைத்திருப்பது ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை என கி.வீரமணி பேட்டி. திருச்சி புத்தூர் பகுதியில் திராவிட கழக மாநில மகளிரணி மற்றும் மகளிர் பாசறை கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திராவிட மாடல் ஆட்சியில், உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் செய்துள்ளார். பெண்களை இல்லத்தில் அடக்கி வைத்திருப்பது ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை. […]
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்கள், கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் வெட்டு தனிமைப்படுத்துதலில் இருந்தார். இந்த நிலையில், தற்போது டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியாகாந்தி உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அண்மையில் 110 விதியின்கீழ் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி,முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா கடந்த ஜூன் 3 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.அந்நாளில் முதல்வர் பல்வேறு உதவிகளையும்,கலைஞர்களுக்கு விருதுகளையும் வழங்கினார். இந்நிலையில்,கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணாநகரில் மாவட்ட கிழக்கு […]
தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு ஆறரை நாட்களுக்குதான் உள்ளது என்றும்,இனி வரும் காலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லாத அளவிற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறுகையில்: “தனியார் கொள்முதல் இல்லாமல் சொந்தமாக 6,220 மெகாவாட் மின் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவு செய்வதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.நிலக்கரி கையிருப்பு ஆறரை நாட்களுக்கு உள்ளது. எனினும்,137 டாலருக்கு 4 லட்சத்து 80 […]
அதிமுக பொதுக்குழு மற்றும் கூட்டம் வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில்,தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது என்று அதிமுக தலைமை முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில்,பொதுக்குழு கூட்டம் தொடர்பான அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர் […]
தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நாளை (திங்கட்கிழமை) முதல் 1 – 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து,பள்ளி அமைவிடம்,போக்குவரத்து வசதி போன்றவற்றை கருத்தில்கொண்டு பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றும்,எனினும்,8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இந்நிலையில்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு இன்று கூடுதலாக 1450 அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக […]
இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில்,வருகின்ற ஜூலை மாதம் குடியரசுத்தலைவர் யார் என்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ள வேளையில்,திமுக 133 எம்எல்ஏக்கள் 34 எம்பிக்கள் பலத்துடன் உள்ளது.இதற்கிடையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி […]
நாமக்கல் மாவட்டம்,புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில்,அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கார் விபத்து குறித்து விசாரிப்பதற்காக,இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சந்திரசேகர்,பழனி மற்றும் காவலர்கள் தேவராஜன்,மணிகண்டன் ஆகியோரும் சம்பவ இடத்திற்குச் சென்று மேற்படி கார் விபத்தில் சிக்கிக் தவித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிகாலை சுமார் 2-10 மணி அளவில் அதிவேகமாக வந்த டிராவல்ஸ் வேன் ஒன்று […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரவு செலவு கணக்கு உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால்,இதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து,சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறைத் குழுவால் ஆய்வு நடத்தப்பட இருந்த நிலையில்,தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.அதன்பின்னர்,சட்டப்படி உறுதியாக ஆய்வு […]
தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நாளை (திங்கட்கிழமை) முதல் 1 – 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.அதன்படி, மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள், நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே,நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் […]
தமிழ்நாட்டில் 1 லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்போது சற்று அதிகரித்து வருகிறது.உத்தரபிரதேசம்,மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றன.இதில்,தமிழகத்திலும் தொற்று சற்று அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில்,பிஏ4, பிஏ5 வகை தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளதாகவும், […]
எய்ம்ஸ் மருத்துவமனை டிசைன் இரண்டு மாதத்தில் தயாராகி விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. சபரிமலா ஐயப்பா சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு தேசிய சமிதி விழா சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான். இதையே தான் சனாதன தர்மமும் சொல்கிறது. நாட்டின் பொருளாதாரம், ராணுவ வளர்ச்சியடைவை போல் ஆன்மீகத்திலும் […]
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ். மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் கர்நாடகாவில் போட்டியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெற்றி பெற்றார். அங்கு 3 இடங்களை பாஜகவும் ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சியும் கைப்பற்றியுள்ளன. ,இதனையடுத்து, நிர்மலா சீதாராமனுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கர்நாடக மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எனது […]
21 மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் சனாதன தர்மம் பற்றி ஆளுநர் பேசுவது கண்டனத்துக்கு உரியது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். சபரிமலா ஐயப்பா சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு தேசிய சமிதி விழா சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான். இதையே தான் சனாதன தர்மமும் சொல்கிறது. நாட்டின் பொருளாதாரம், ராணுவ வளர்ச்சியடைவை போல் ஆன்மீகத்திலும் […]