மக்களை சந்திக்கவே மக்கள் ஆசீர்வாத யாத்திரை – இணை அமைச்சர் எல்.முருகன்

L Murugan has said that he will make a pilgrimage to Tamil Nadu to meet the people after taking charge as the Union Minister.

மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றபின் மக்களை சந்திக்க தமிழகத்தில் யாத்திரை செய்கிறேன் என்று எல் முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடையச் செய்யும் நோக்கில் ‘மக்கள் ஆசீர்வாத யாத்திரை’ எனும் சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கோவையில் தொடங்கியுள்ளார். இந்த யாத்திரை வரும் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது என கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றபின் மக்களை சந்திக்க தமிழகத்தில் யாத்திரை செய்கிறேன். நாடு முழுவதும் மக்கள் ஆசீர்வாத யாத்திரை நடைபெறுகிறது. கொரோனா விதிகளை பின்பற்றியே நிகழ்ச்சிகள் நடத்துகிறோம்.

கொங்குநாடு என்பது மக்கள் முடிவு செய்ய வேண்டியது. மத்திய அமைச்சர்களை அறிமுகம் செய்துவைக்கக்கூடிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இடமளிக்கவில்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது முதன்முறையல்ல, ஏற்கனவே பல கோயில்களில் இருக்கின்றனர். மேலும், சர்வதேச நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.