#Breaking:பாலியல் தொல்லை:அதிமுக பிரமுகர் கைது!

Perambalur: AIADMK city secretary Vinod was arrested near Arumbavoor for sexually harassing a woman with a knife.

பெரம்பலூர்:அரும்பாவூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக நகரச் செயலாளர் வினோத் என்பவர் கைது.

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே பூலாம்பாடியை சேர்ந்த வினோத் என்பவர் அதிமுக நகரச் செயலாளராக உள்ளார்.இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.மேலும்,செல்போனில் தொடர்பு கொண்டு அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,நேற்று மாலை சாலையில் நடந்து சென்ற அந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் ரீதியாக அழைத்ததாகவும்,வர மறுத்தால் உயிரோடு எரித்து விடுவதாகவும் மிரட்டி,தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து,அந்தப் பெண் கூச்சலிட்டதை தொடர்ந்து,அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து,பாதிக்கப்பட்ட பெண் அரும்பாவூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில்,வினோத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து,பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக வினோத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.