கோவை பாஜக தலைமையகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

கோவை பாஜக தலைமையகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை.

கோவை பாஜக தலைமையகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை.

கோவை மாவட்ட சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு  வீசியுள்ளனர். அதனை தொடர்ந்து, ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை ஒன்றின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலை வருகிறது.

இதனை தொடர்ந்து பாஜக அலுவலகம் மீது குண்டு  வீசப்பட்டதை தொடர்ந்து, போலீசார் பாஜக அலுவலகத்தில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பதாக நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பாஜக அலுவலகம் எதிர்ப்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.