முதலமைச்சராக பதவியேற்ற பின் மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்கள்..!

After taking office as the Chief Minister of MK Stalin, Periyar is going to pay homage to MK Stalin at Anna, artist memorials.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்ய உள்ளார்.

இன்று காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் முன்னிலையில், தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலினும், அவரை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். இந்நிலையில், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்ய உள்ளார்.

மறைந்த திமுக நிர்வாகி சிட்டி பாபுவின் இல்லத்திற்கு சென்று அவரின் உருவ படத்திற்கும் மரியாதை செய்ய உள்ளார். பின்னர், தொடர்ச்சியாக மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற இருக்கிறார்.