தபால் வாக்கு சர்ச்சை.? தேர்தல் அதிகாரிகளை முற்றுகையிட்ட அதிமுகவினர்.!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒரு திமுக நிர்வாகி கை சின்னத்தில்,  மூதாட்டியை தபால் வாக்கு பதிவு செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிமுகவினர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒரு திமுக நிர்வாகி கை சின்னத்தில்,  மூதாட்டியை தபால் வாக்கு பதிவு செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் வரிசையில் இருந்து வாக்களிக்க முடியாதோர், தேர்தல் பணியில் இருக்கும் அரசு அதிகாரிகள் ஆகியோர் தபால் மூலம் தங்கள் வாக்குகளை செலுத்துவர்.

தபால் வாக்கு :ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குகள் நேற்று பதிவு செய்யப்பட்டன. வயது முதிர்ந்தோருக்கு தேர்தல் அதிகாரிகளே நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று தபால் வாக்குகளை பதிவு செய்தனர். இதில், நேற்று ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியில்  அரசு அதிகாரிகள் தபால் வாக்கு பதிய சென்றனர்.

அதிமுக போராட்டம் :அப்போது அங்கு ஒரு மூதாட்டியிடம் திமுக பெண் நிர்வாகி ஒருவர் கை சின்னத்தில் வாக்களிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்குள்ள அதிமுக நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.