இன்று முதல் வரும் 9 வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Public gatherings will be banned from today until the 9th, as the Corona has been warned of a third wave.

கொரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று முதல் 9ம் தேதி வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடி அமாவாசை நிகழ்ச்சிக்காக கடற்கரை பகுதிகளில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேசிய பேரிடர் மெளனமாய் சட்டத்தின்கீழ் ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு திருவிழாக்கள் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டும், ஆடி அமாவாசை நிகழ்ச்சிக்காக கடற்கரையில் அதிக மக்கள் கூடும்பட்சத்தில், அரசின் விதிகளை பின்பற்றுவதிலும், கொரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையிலும், இன்று முதல் 9ம் தேதி வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும் முக்கிய கோவில்களில் 1,2,3,4 போன்ற தேதிகளில் நடைபெறவுள்ள ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கினை முன்னிட்டு நடக்கும் நிகழ்ச்கியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையில் பொதுமக்கள் கூடி வழிபடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.