இந்திய ஜனநாயகத்துக்கு எதிராக இங்கிலாந்தில் ராகுல் காந்தி பேசியதால் அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக எம்பிக்கள் மனு கொடுத்துள்ளனர்.
இங்கிலாந்தில், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பேசிய போது, இந்திய ஜனநாயகம் தற்போது அபத்தான நிலையில் உள்ளது. அரசியல் தலைவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.என்று குற்றம் சாட்டினார்.
அமளி :
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்களை குறிப்பிட்டு பாராளுமன்றத்தில் கடந்த 4 நாட்களாக பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். அதே போல அதானி குழும விவகாரம் குறித்து விசாரணை குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டு வந்ததால் பாராளுமன்றம் 4 நாட்களாக முடங்கியுள்ளது .
சஸ்பெண்ட் :
இந்நிலையில்,இந்திய ஜனநாயகத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி லண்டனில் பேசியதால் அவரை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
ராகுல்காந்தி கோரிக்கை :
அதே போல, நான் இந்திய ஜனநாயகம் குறித்து தவறாக பேசவில்லை. என கூறி, அதற்கான விளக்கத்தை அளிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற அனுமதிக்க வேண்டும் என ராகுல்காந்தி, சபாயகரிடம் கோரிக்கை வைத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.