'ஆரம்பிக்கலாங்களா'? விக்ரம் பட ஸ்டைலில் ராகுல் காந்தியின் பதிவு.!

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகாவின் கோலாறில் நடந்த பொதுத்தேர்தல் பரப்புரையில் “எல்லா திருடர்களுக்கும் மோடி

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகாவின் கோலாறில் நடந்த பொதுத்தேர்தல் பரப்புரையில் “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என்று மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது.

2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்து இருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு:

இந்த நிலையில், ராகுல் காந்தி இன்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து, மதியம் 1 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தன்னை தகுதி நீக்கம் செய்தது பாஜக அரசின் கவனத்தை சிதறடிக்கும் தந்திரம் என்று கூறினார். மேலும், அதானி விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காய் முன் வைத்தார்.

நான் யாருக்கும் பயப்படவில்லை:

தற்போது, தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில், கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தின் டைட்டில் டிராக்கை வைத்து, செய்தியாளர்களை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளள்ளார். மேலும் அந்த ஸ்டோரியில், நான் யாருக்கும் பயப்படவில்லை.! என்னை வாழ்நாள் முழுவதும் தகுதி நீக்கம் செய்யுங்கள் அல்லது சிறையில் தள்ளுங்கள், நான் தொடர்ந்து கேள்வி கேட்பேன், நிறுத்த மாட்டேன் என்ற அதிரடி குறிப்பை பகிர்ந்துள்ளார்.

unknown node

நாளை நாடு முழுவதும் போராட்டம்:

இதற்கிடையில், நாளை காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் சிறை தண்டனையை கண்டித்தும், எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட உள்ளனர். மேலும் இந்த போராட்டம் காந்தி சிலை முன்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.