பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்..!

Actor Rajinikanth has thanked those who wished him a happy birthday on Twitter. Actor Rajinikanth is celebrating his birthday today.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனைத்தொடர்ந்து திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளுக்கு தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

அதில், இன்று என்னை வாழ்த்திய மதிப்பிற்குறிய தமிழக முதல்வர் திரு .எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் அவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு க ஸ்டாலின் அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசியல் நண்பர்களுக்கும் என் நலம் விரும்பிகளுக்கும், சக திரை கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் மற்றும் உற்சாகத்துடன் என் பிறந்தநாளை கொண்டாடி வரும் உலகெங்கிலுமுள்ள என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.

unknown node