மீண்டும் குழப்பத்தில் கர்நாடக அரசியல் !மும்பை சென்ற காங்கிரஸ்  எம்எல்ஏ நாகராஜ்

கர்நாடகா அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்.எல்.ஏக்கள் 16  பேர்  செய்தனர் .இதனால் ஆளும்

கர்நாடகா அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்.எல்.ஏக்கள் 16  பேர்  செய்தனர் .இதனால் ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.எனவே   காங்கிரஸ் கட்சி  ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

நேற்று ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களில் ஒருவரான நாகராஜ் என்பவரை காங்கிரஸ் மூத்த  தலைவரும்,கர்நாடக மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சருமான சிவக்குமார் சந்தித்து பேசினார். இதன் பின்னர் எம்.எல்.ஏ நாகராஜ் கூறுகையில், நான் ராஜினாமாவை வாபஸ் பெற இருக்கிறேன் என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போது  பாஜக நிர்வாகி அசோக்குடன் மும்பை சென்றார் காங்கிரஸ்  எம்எல்ஏ நாகராஜ் .இந்த சம்பவம் காங்கிரஸ் அரசியலில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் குழப்பத்தில் கர்நாடக அரசியல் !மும்பை சென்ற காங்கிரஸ்  எம்எல்ஏ நாகராஜ்