அழைப்பை வாபஸ் பெறுகிறேன்!ராகுல் காந்தி கருத்தால் பின்வாங்கிய காஷ்மீர் ஆளுநர்

ராகுல் காந்தியை காஷ்மீருக்கு அழைத்த கருத்தை வாபஸ் பெற்றுள்ளார் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியை காஷ்மீருக்கு அழைத்த கருத்தை வாபஸ் பெற்றுள்ளார் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசி அறிவித்தது.இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே  ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பி வருகிறது.குறிப்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக பாஜகவை விமர்சனம் செய்து வருகிறது.

அந்த வகையில்  காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து  நடைபெற்று வருவதாக கடந்த சிலநாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்தார்.

ராகுலின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறுகையில், ராகுல் காந்தி காஷ்மீருக்கு வரவேண்டும் என்று நான் அழைப்புவிடுக்கிறேன்.ராகுல்  காஷ்மீருக்கு வருவதற்காக நானே  விமானம்  அனுப்பி வைக்கிறேன் .இங்கு வந்து களத்தைப் பார்த்துவிட்டு பின்னர் அதுகுறித்து பேசவேண்டும்  என்று தெரிவித்தார்.

unknown nodeunknown node

காஷ்மீர் ஆளுநர் இதற்கு பதில் அளித்தார்.அவரது பதிலில் ,ராகுல் காந்தி  காஷ்மீர்  வருவதற்கு நிபந்தனை விதிப்பதால், அழைப்பை வாபஸ் பெறுகிறேன் என்று தெரிவித்தார்.இதனிடையே இந்த கருத்துக்கு  ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கூறுகையில், எந்த நிபந்தனையும் இன்றி ஜம்மு காஷ்மீர் வர தயாராக இருக்கிறேன் , எப்போது வரட்டும்? என்று  கேள்வி  எழுப்பியுள்ளார்.