முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன் மறைவுக்கு கனிமொழி எம்.பி அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட்.
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தலைவர் கலைஞர் அவர்களின் செயலாளராக அரை நூற்றாண்டுகளுக்கு மேல் செயல்பட்டவர் திரு. சண்முகநாதன் அவர்கள். தலைவர் கலைஞர் என்ன நினைக்கிறார், என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை எல்லாம் உணர்ந்து அவருக்கு நிழலாகவே இருந்தவர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்களுக்கும் உறுதுணையாகத் திகழ்ந்த அவரது மறைவு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node