திமுக தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள்.. புதிதாக 5 வாக்குறுதிகள்..!

நேற்று மு.க.ஸ்டாலின் வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் 505 அறிவிப்புகள் இடம் பெற்றன. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள்

நேற்று மு.க.ஸ்டாலின் வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் 505 அறிவிப்புகள் இடம் பெற்றன. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள் செய்துள்ளனர். தேர்தல் அறிக்கையில் 5 வாக்குறுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது.

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது என வாக்குறுதி 43ல் சேர்க்கப்படுகிறது.

சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை நிராகரிக்கப்படும்.

காட்டுப்பள்ளி துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்படாது.

இந்திய குடியுரிமை திருத்தச்சட்டம் 2019-ஐ திரும்பப்பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.