முரசொலி நிலம் குறித்து உரிய நேரத்தில் ஆதாரம்- ஸ்டாலின் அறிவிப்பு

முரசொலி நிலம் குறித்து உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் உண்மையை நிரூபிப்பேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முரசொலி நிலம் குறித்து உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் உண்மையை நிரூபிப்பேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அசுரன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து தனது ட்விட்டர் பக்கம் மூலமாக வாழ்த்து தெரிவித்தார்.அதில்,பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் என்று தெரிவித்திருந்தார்.அவர் பஞ்சமி நிலம் குறித்து கூறிய கருத்து பெரும் விவாதத்தை கிளப்பியது.இதற்க்கு எதிர்க்கருத்து கூறிய ராமதாஸ் குறிப்பாக முரசொலி’ அலுவலகத்துக்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைப்பாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

unknown node