"கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக அமல்படுத்துக" – உயர்நீதிமன்றம்

The Chennai High Court has urged the government to show seriousness in enforcing the corona prevention rules.

கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், பலவேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு குறித்த அரசின் கட்டுப்பாடுகளை கூட்டுப்பொறுப்புடன் மக்கள் அனைவரும் பின்பற்றுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் மட்டும் பெரும்பாலானோர் மாஸ்க் அணிகின்றனர், மற்ற பகுதிகளில் அப்படி இல்லை என்றும் கூறியுள்ளது. அதிமுக அலுவலகத்தில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் தடுப்பு விதிகளை பின்பற்றவில்லை என்ற தொடரப்பட்ட வழக்கை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து.