தமிழ்நாடு மீனவர் கர்நாடக வனத்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டது மனிதநேயமற்ற செயல் எனவும், இதனை கடுமையாக கண்டிப்பதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு – கர்நாடக எல்லை பகுதியில் மேட்டூர் பகுதியில் கர்நாடக எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடியதாகவும், அதனை தடுத்து பிடிக்க முயற்சிக்கையில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில், வனத்துறையினர் சுட்டதில் ராஜா எனும் மீனவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பதற்றம் :இந்த விவகாரம் தமிழக – கர்நாடக எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாலாறு வழியாக இரு மாநில எல்லை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் ஊர் மக்கள் திரளானோர் அப்பகுதியில் திரண்டு இருப்பதால் பதற்றத்தை தணிக்க காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கண்டனம் :இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது கண்டனத்தை அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார். அதில், சேலம் மாவட்டம் கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற மீனவரை கர்நாடக வனத்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டது மனிதநேயமற்ற செயல் எனவும், இதனை கடுமையாக கண்டிப்பதாகவும், சுட்டுக் கொல்லப்பட்டு அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.